டுரின்: மஹிந்திரா ஆட்டோமொபைல் குழுமத்தின் ஒரு பகுதியான, சொகுசு மின்னாற்றல் வாகனங்களைத் தயாரிக்கும், இத்தாலியிலுள்ள Automobili Pininfarina என்ற உற்பத்தி நிறுவனம், ஃபார்முலா 1 பந்தயக் காரை விட வேகமானது என்று நம்பப்படக்கூடிய பட்டிஸ்டா படிஸ்டா என்ற தனது சொகுசு மின்னாற்றல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: இந்த கார், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள், மணிக்கு 100 கி.மீ. என்ற வேகத்தை அடைந்துவிடும்.
வரும் 2020ம் ஆண்டு சந்தைக்கு அறிமுகம் செய்யப்படுகையில், இத்தாலியில் தயாரான கார்களிலேயே அதிக சக்தியுடைய உயர்ரக காராக திகழும். இதுதவிர, தற்போது நடைமுறையில் இருக்கும் மணிக்கு 250 மைல்கள் என்ற தடையை, இந்த கார் உடைத்து, எந்தவித நச்சு வெளியீடும் இல்லாமல், மணிக்கு 300 மைல்கள் என்ற சாதனையை எட்டும்.
மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் எந்த வேகமான காரை விடவும், இதன் உட்புற எரிப்பு இன்ஜின் தொழில்நுட்பத்தால், இது வல்லமை வாய்ந்ததாக திகழும். மேலும், இந்த கார் எதிர்கால வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.
மொத்தம் 150 படிஸ்டா கார்களுக்கு மேல் வடிவமைக்கப்பட மாட்டாது என்றும், அந்த எண்ணிக்கையும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு/ஆசியா ஆகிய பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டின் இறுதியில், 1 மாதகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின் கைகளில், 50 மில்லியன் யூரோ தொகைக்கு, Pininfarina வந்துசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி