துபாய்:
33 நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் என துபாய் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தந்த நாடுகளில் பெறப்பட்ட சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை கொண்டு பல நாடுகளில் இருந்து துபாயில் பலர் பணியாற்றி வருகின்றனர்.
வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பாக துபாய் அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 33 நாடுகளில் பெறப்பட்ட சர்வதேச ஒட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த 33 நாடுகளின் பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை.

வளைகுடா நாடுகளான கத்தார், ஓமன், பக்ரைன், சவுதி அரேபியா, குவைத், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, ஹாலந்து, இத்தாலி, ஸ்வீடன், துருக்கி, கிரீஸ், சுவிட்சர்லாந்து, டென்மார்க், ரஷ்யா, போலந்து, ரொமேனியா, பின்லாந்து, போர்சுகல், தென் ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
துபாயில் சாலை போக்குவரத்து ஆணையத்தில் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.