சென்னை

பாதுகாப்பு காரணங்களுகாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் புல்வாமாவில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து நாடெங்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

அதனால் விமான போக்குவரத்து அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதை ஒட்டி நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள்து.

இந்த தடை குறித்து விமான நிலைய அதிகாரிகள், “பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடர உள்ளது. அத்துடன் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே பயணிகள் விமான நிலையத்தினுள் அனுமதிக்கப் படுகிறார்கள்” என தெரிவித்துள்ளனர்.