குட்டி தல ஆத்விக்கு இன்று பிறந்த நாள்!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயர் ‘தல அஜித்’ தல அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் , அனோஷ்கா மற்றும் ஆத்விக் குமார்.

அஜித் ஷாலினி தம்பதி மகன் ஆத்விக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

மதுரையில் உள்ள ரசிகர்கள் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முகத்தை சுவரில் பிரமாண்டமாக வரைந்துள்ளனர். அந்த சுவர் விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel