அமெரிக்கா: 

குழந்தைகள் குறித்த தகவல்களை பதிவேற்றியதற்காக டிக்டாக்  செயலி நிறுவனத்துக்கு 5.7 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க வர்த்தக ஆணையம் (Federal Trade Commission (FTC)). இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை அடிப்படையாகக் கொண்ட விடியோ வகை சமூக வலைதளமான டிக் டாக், உலகம் முழுவது பெரும் பிரபலமடைந்து வரும் நிலையில், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்தமைக்காக, 5.7 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 40 கோடி) அபராதம் விதித்துள்ளது அமெரிக்க அரசு.

மக்களின், ஆடல், பாடல் மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்  டிக்டாக் என்னும் மொபைல் செயலி நாளடைவில் ஆபாசத்தின் உச்சக்கட்டமாக அருவெறுப்பான முறையில் அங்க அசைவுகளு டன் கூடிய செயலியாக மாறியும், இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காகவும் உள்ளது.

இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியில் நேரத்தை செலவிடும்  வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ரகசியத் தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவில், குழந்தைகள் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி (Children’s Online Privacy Protection Act), 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் தான் வலைதளத்தை பயன்படுத்துகிறார்களா என, உறுதி செய்தபிறகு தான், வலைதள மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடரவேண்டும்.

‘பல குழந்தைகள் டிக் டாக் பயன்படுத்துவதை அறிந்தும், அந்நிறுவனத்தின் ஆப்பரேட்டர்கள் Parental Consent எனும் பெற்றோர்களின் அனுமதியின்றி, 13 வயதுக்கு உட்பட்டவர்களின் பெயர், இ-மெயில் அட்ரஸ் மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளது” என FTC தரப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.‘

இது தொடர்பாக விசாரணை நடத்திய, அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம், டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு 5.7 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 40 கோடி) அபராதம் விதித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டிக்டாக் செயலி நிறுவனம்,   ’13 வயதுக்குட்பட்டவர்களுக்காகப் பெற்றோர் களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.