காபூல்:
பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய விமான தாக்குதலை ஆப்கானிஸ்தானியர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்க முகாமை இந்திய விமானப் படையினர் குண்டு வீசி அழித்தனர்.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் மீது அந்நாட்டு மக்களுக்கு கோபம் நிரந்தரமாகிவிட்டது.
இந்நிலையில், இந்திய விமானப் படை தாக்குதலை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர் முகமது இக்பால் அஃப்சாலி.
இவர் தனது முகநூலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை விமர்சிப்போர் என் நட்பு பட்டியலில் இருந்து விலகிவிடுங்கள். இல்லையென்றால் உங்களை எரிச்சலுக்குள்ளாக்குவேன் என்று பதிவிட்டிருந்தார்.
அப்சாலி இந்தியாவைச் சேர்ந்தவர். 1990-ல் ஆப்கானிஸ்தானில் கலவரம் வெடித்தபோது, பாகிஸ்தானில் அகதியாக இருந்தார்.
நம்மை எதிரி தாக்கும்போது நாம் பதிலடி தரவேண்டும். அதைத்தான் இந்தியா செய்திருக்கிறது என்றார் அஃப்சாலி.
முன்னாள் அரசு ஊழியர் கத்ராதுல்லா அன்டார் சுல்தானி கூறும்போது, தன் நாட்டின் பாதுகாப்புக்காக ஒரு நாட்டை அமெரிக்கா தாக்கும்போது, அதையே இந்தியா செய்வதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், ஆப்கானிஸ்தானில் பொருளாதார சீரமைப்பு மற்று வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா 3 பில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது.
இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆப்கானிஸ்தானியர்கள்.