இஸ்லாமாபாத்
விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்க தடை கோரி அளித்த மனுவை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து இந்தியா மீது தாக்குதல் செய்தது. அந்த விமானப்படை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை ஓட்டிச் சென்ற விமானியான விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.
அபிநந்தனை விடுவிக்க கோரி பல நாடுகள் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டன. அதை ஒட்டி நேற்று பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் அபிநந்தனை இன்று விடுவிக்க முடிவு எடுக்கப்ப்பட்டது. அவரை இன்று வாகா எல்லையில் பாகிஸ்தான் கொண்டு வந்து விட உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அபிநந்தனை விடுவிக்க தடை கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அதை தள்ள்படி செய்துள்ளது.
இதனால் அபிநந்தன் இன்று விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.