டப்பா

ரண்டு வருடம் முன்பே போர் வரும் என பாஜக தெரிவித்ததாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறி உள்ளார்

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார்.   அவர் பாஜகவுடன் முன்பு கூட்டணி வைத்திருந்தார்.    பவன் கல்யாண் பிரபல தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கது.   நேற்று ஜனசேனா கட்சியின் சார்பில் கடப்பாவில் நேற்று பேரணி ஒன்று நடைபெற்றது.

பேரணியில் அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார்.  அப்போது அவர், “தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட புல்வாமாவில் நடந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடந்த தாக்குதல் காரணமாகி விட்டது.    ஆனால்  பாஜக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே பாகிஸ்தானுடன் போர் மூளும் என எனக்கு தெரிவித்துள்ளது.

இதில் இருந்து நாட்டின் நிலை எப்படி உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.    இந்த நிலையிலும் பாஜகவினர் தங்களுக்கு மட்டுமே நாட்டுப் பற்று உள்ளதாக சொல்லிக் கொள்கின்றனர்.   நம் அனைவருக்கும் பாஜகவை விட 10 மடங்கு அதிகமாக நாட்டுப் பற்று உள்ளது.

இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் சம உரிமை உள்ளது.   பாகிஸ்தானில் இந்துக்களில் நிலை என்ன என்பது எனக்கு தெரியாது.   ஆனால் இந்தியாவில்  இஸ்லாமியர்கள் இதயத்தில் வைத்து போற்றப்படுகிறார்கள்.   இந்தியா அசாருதீனை கிரிக்கெட் தலைவராகவும் அப்துல் கலாமை ஜனாதிபதியாகவும் ஆக்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.