டில்லி
இந்திய விமானப்படை விமானி விடுதலை செய்யப்படும் நேரத்தில் நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என அர்னாப் கோஸ்வாமிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அறிவுரை அளித்துள்ளார்
பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியதால் அவர்க:அஒ விரட்டிச் சென்ற இந்திய விமானப்படையின் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதை செலுத்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். இது உலகெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என பல உலக நாடுகள் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டன. நேற்று நடந்த பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் அபிநந்தனை விடுதலை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. அதை ஒட்டி இன்று அபிநந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார்.
இது குறித்து அர்னாப் கோஸ்வாமி நடத்தும் ரிபப்ளிக் டிவி தனது டிவிட்ட்ரில், “நாம் அளித்த அழுத்தத்தினால் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை நாடு கொண்டாடி வருகிறது” என பதிந்தது.
இதற்கு பிரபல தொழில் நிறுவனமான மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, “அர்னாப் கோஸ்வாமி இந்த விவகாரத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும். இது கொண்டாட்டத்துக்கான அழைப்பு விடுத்து இந்த நடவடிக்கையை பாதிக்க வைக்கும் நேரம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.