ஸ்தான்புல்

ற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

இந்திய விமானப்படை தாக்குதலில் நேற்று பாகிஸ்தான் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாதிகள் முகாம் அடியோடு அழிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது மிகவும் கோபம் அடைந்தது. எனவே இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலை நடத்தி உள்ளது. இதை ஒட்டி இந்திய விமானப்படையும் பதில் தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்திய விமானப்படை விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் பயணம் செய்த விமானப்படை கமாண்டர் பாகிஸ்தானிடம் சிக்கி உள்ளார். அந்த விமானப்படை கமாண்டர் அபிநந்தனின் புகைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அபிநந்தன் பிடிபட்ட தகவலை இந்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதை ஒட்டி நாடெங்கும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைகாட்சியில் உரை நிகழ்த்தி உள்ளார். இம்ரான் கான் தனது உரையில், ”ஏற்கனவே புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே நான் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளேன்.

ஆயினும் இந்தியப்படைகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல்கள் நடத்தின. எங்கள் எல்லைக்குள் வருபவர்களுக்கு நாங்களும் அதை செய்ய முடியும் என்பதை தற்போது காட்டி உள்ளோம்.   தற்போது இந்தியாவின் இரு விமானப்படை விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளோம். அதில் வந்த இரு இந்திய விமானிகளும் எங்கள் காவலில் உள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டால் அது எனது கட்டுப்பாட்டையும் இந்தியப் இரதமர் கட்டுப்பட்டையும் மீறி சென்று விடும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையைல் நல்லுணர்வு நிலவ வேண்டும் . நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லும் என தெரிகிறது. ஆகவே இந்தியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்