டந்த ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் போலவே தற்போது, இந்திய விமானப்படை விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி உள்ளார்.

சென்னை தாம்பரத்தை சேர்ந்த அபிநந்தனின் தந்தையும் முன்னாள் விமானப்படை வீரர் ஆவார். இவர்தான், கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கி கார்த்திக் நடித்த காற்று வெளியிடை என ராணுவ வீரர் தொடர்பான  படத்திற்கு, ஆலோசகராக இருந்து விமானப்படை குறித்த தகவல் களை எடுத்துக்கூறி உதவி செய்து வந்தவர்.

அந்த படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் போலவே, தற்போது அவரது மகன் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உள்ளார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணி ரத்தினத்தின் காற்று வெளியிடை படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படம்  கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்க்கில் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. படத்தில், யுத்தத்தின்போது, போர் விமானத்தில் இருந்து பாரா சூட்டில் குதித்து தப்பிக்க முயலும் விமானி கார்த்தி, முடியாமல் மரத்தில் சிக்கி, பனிவெளியில் கீழே சரிய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை சுற்றி வளைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.  மேலும், படத்தில், இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகள், ஸ்ரீநகர், லே  ராணுவ முகாம், போர் விமான பைலட் என இந்திய விமானப்படையை தெள்ளத்தெளிவாக காட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று காலை பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் சென்ற போர் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப் பட்ட நிலையில், அதில் இருந்து பாராசூட்டில் குதித்த அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சூழப்பட்டு கைது செய்யப்பட்டார்.

படத்திற்காக அபிநந்தனின் தந்தை தெரிவித்த ஆலோசனை,  தற்போது  நிறைவேறி ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது கொடூரமான தற்செயல் என்றாலும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.