சேஞ்ச்-4 விண்கலம் நிலவில் பருத்தி விதைகளை முளைக்கத் தொடங்கியுள்ளதாக சீனா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

moonseed

நிலவின் மறுப்பக்கத்தை ஆராய்வதற்காக சீனா சேஞ்ச்- 4 என்ற விண்கலத்தை கடந்த மாதம் விண்ணிற்கு அனுப்பியது. இதன் மூலம் மனித கண்ணிற்கு புலப்படாத இருண்டப்பகுதி என அழைக்கப்படும் நிலவின் மறுப்பத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. இந்த விண்கலத்தை கொண்டு நிலவில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அறிவதற்காக அங்கு தாவரங்களை விதைக்க சீனா முடிவு செய்தது.

அதன்படி சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம் நில்வின் பருத்தி விதைகளை முளைக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை ஆய்வு செய்யும் சாதகம் ஏற்பட்டுள்ளது எனவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், சேஞ்ச்-4 விண்கலம் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி, உருளை கிழங்கு உள்ளிட்ட வேறு சில பயிர்களின் விதைகளையும் நிலவில் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சீனாவின் இந்த ஆய்வு உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிலவில் பயிர்கள் விளைந்தால் பூமியைப் போல் அங்கேயும் மனிதர்கள் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தி விடலாம் என சீன விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.