சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுத் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்ப படுகின்றன.

தற்போது பண்டிகையின் போது சினிமா ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களை காண வசதியாக பல தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன. அனைத்தும் சமீபத்தில் வெளியான படங்கள் எபதால் ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர். இந்த வருட பொங்கலை ஒட்டி சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் சமீபத்திய படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன.

சன் டிவி

வி ஐ பி 2 – 15.01.2018 காலை 11 மணி : தனுஷ், கஜோல் மற்றும் அமலாபால் நடிதுள்ள இந்தப் படம் ஒரு கட்டுமான பொறியாளர் வாழ்வில் நடைபெறும் போராட்டங்களை அடிப்படையாக கொண்ட கதை கொண்ட குடும்ப திரைப்படம் ஆகும்.

சண்டைக்கோழி 2 – 15.01.2018 மாலை 6.30 மணி : விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்த இந்த திரைப்படம் ஒரு ஜனரஞ்சக படமாகும். வெகு சமீபத்தில் வெளியான படங்களில் ஒன்றான இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார்.

ராட்சசன் – 16.01.2018 காலை 11 மணி : விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் உருவான இந்தப் படம் ஒரு சைக்கோ கொலையாளியைப் பற்றிய திகில் படமாகும். இந்தப் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

குலேபகாவலி 17.01.2018 காலை 11 மனி : பிரபு தேவா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள இந்தப் படம் ஒரு ஜனரஞ்சக திரைப்படம் ஆகும். பிரபு தேவாவின் நடனத்திறமை இந்த படத்தில் பேசப்பட்டது.

விஜய் டிவி

சாமி 2 – 15.01.2018 காலை 11 மணி : விக்ரம் மற்றும் இயக்குனர் ஹரி இணைந்த இப்படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

பரியேறும் பெருமாள் – 15.1.2018 மதியம் 2.30 மணி : கதிர் மற்றும் ஆனந்தி நடித்த இந்த திரப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட வாலிபனின் போராட்டத்தை கூறும் படமாகும். அந்த வாலிபனுக்கு ஒரு உயர்சாதிப் பெண்ணின் காதலால் கிடைக்கும் விளைவுகளை பற்றி படம் விவரிக்கிறது.

வடசென்னை – 16.01.2018 காலை 11 மணி : தனுஷின் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் மிகச் சமீபத்தில் வெளியான இந்தப் படம் வடசென்னை தாதாக்கள் வாழ்வை அடிப்படையாக கொண்டதாகும். தனுஷுடன் ஆண்டிரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளன்ர்.

கடைக்குட்டி சிங்கம் : 16.01.218 மதியம் 2.30 மணி : முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமான இப்படத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயேஷா மற்றும் பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மனம் – 17.01.2018 காலை 9 மணி : தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த படம் நாகேஸ்வர ராவின் கடைசி திரைப்படமாகும். இந்த படத்தில் அவர் மகன், பேரன்கள் ஆகிய குடும்பத்தினருடன் ஸ்ரேயாவும் நடித்துள்ளார்.

இதைத் தவிர நேற்றே பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஜீ தொலைக்காட்சியில் நடிகையர் திலகம் ஒளிபரப்பப்பட்டது. பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான இப்படத்தில் கிர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.