சபரிமலை
நேற்று மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் தோன்றிய மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலை இயப்பன் கோவில் மகர ஜோதி பூஜைகளுக்காக தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மகர ஜோதியை காண பக்தர்கள் ஏராளமாக கூடி இருந்தனர். இந்த மகர விளக்கு பூஜையின் போது பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாக தோன்றி பக்தர்களுக்கு தரிசனம் தருவதாக ஐதீகம்.
இந்த பூஜைக்காக வழக்கம் போல பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு அந்த திருவாபரணப் பெட்டி மேள தாளங்களுடன் சன்னிதானம் வந்து சேர்ந்தது. அதன் பிறகு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் சாற்றப்பட்டன.
சுமார் 6.30 மணிக்கு திருவாபரணம் சாற்றப்பட்ட ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்தது. அதே நேரம் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது. சரண முழக்கத்துடன் ஐயப்ப பக்தர்கள் ஜோதியை தரிசனம் செய்தனர்.