டில்லி:

மோடி அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 103வத சட்ட திருத்தம் செய்வதற்கான மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், இதற்கு குடியரசு தலைவர் அனுமதி அளித்ததும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஆண்டு முதலே இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு  வழங்கும்நிலை உருவாகும்.

இந்த நிலையில்,  அரசியலமைப்பின் (103 வது திருத்தம்) சட்டத்தை  எதிர்த்து, சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில் இதுவரை செய்யப்பட்டுள்ள திருத்தங்களை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.