டில்லி

பாஜக போட்டு வரும் சாதிக் கணக்கு அந்த கட்சியாலேயே சரிந்து வருவதாக “தி ப்ரிண்ட்” ஊடகம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் சாதிக் கணக்கு பற்றி தி ப்ரிண்ட் ஊடகம் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

”பாஜக ராமர் கோவில் அமைப்பு குறித்த வாக்குறுதியால் மட்டும் வெற்ற் பெற்றதாக பலரும் எண்ணுகின்றனர்.   ஆனால் சாதி வாரியான கணக்குகள் மூலமே பாஜக பெரும் வெற்றி அடைந்துள்ளது.   அது அனைத்து மாநிலங்களுக்கும் போருந்தும்.   அது  பிராமணர், வைசியர், யாதவர், மராத்தாஸ் என யாராக இருந்தாலும் சாதிக் கணக்கின் வெற்றியே ஆகும்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் மோடி அலை வீசிய நேரத்தில் பாஜக பல ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்த காரணம் சாதி அரசியல் தான்.  கடந்த 2014 ஆம் வருடம் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தலித் ஓட்டுக்களை கவர என்பது அனைவரும் அறிந்ததே.   அது மட்டுமின்றி அப்போது சாதித் தலைவர்களை பிடிக்காத சிலரும் அந்த தலைவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட பாஜகவுக்கு வாக்களித்தனர்.

மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் பலனடைந்ததாக கூறப்பட்டது.   பாஜக ஆதரவாளர்களில் முக்கியமானவர்கள் பணக்காரர்கள் என்பது பலரும் அறிந்ததே.  கடந்த 2017 ஆம் வருடம் நடந்த பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவிட ஒரு தொண்டர் நேரடியாகவே கேட்டார்.

அவர் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சில முக்கியமானவர்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர்  என கூறியதற்கு அமித் ஷா, “முக்கியமானவர்கள் என்பதை மறந்து விட்டு முடிவை மட்டும்  பாருங்கள்’ என பதில் அளித்தார்.   அதே நேரத்தில் தலித்துக்கள் பாஜகவை விட்டு விலகத் தொடங்கினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நண்பர்களே என அழைத்த மோடி ஏழைகளே என அழைக்கத் தொடங்கினார்.    அதன் மூலம் ஏழைகள் அவருக்கு நண்பர்கள் அல்ல என்பதை உணர்ந்திருந்தார்.   அதே நேரத்தில் உயர்சாதியை சேர்ந்த செல்வந்தர்கள் தன்னை விட்டு செல்ல மாட்டார்கள் என அவர் நம்பி இருந்தார்.   மதச்சார்பின்மை  பேசும் காங்கிரசிடம் அவர்கள் சேர மாட்டார்கள் என அவர் எண்ணினார்.

ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த தலித் வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பாஜக அரசு மறுசீராய்வு மனு அளித்ததால் உயர்சாதியினர் பாஜகவின் மீது அதிருப்தி அடைந்தனர்.  அது மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நன்கு எதிரொலித்தது.   உயர்சாதியினர் பலர் அந்த தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.   இதன் மூலம் பல இடங்களில் பாஜக குறைந்த வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவியது.

தற்போது பாஜக அறிவித்துள்ள 10% இட ஒதுக்கீடு சட்டம் பாஜகவுக்கு எதிர்பார்த்த பலனை அளிப்பதும் சந்தேகம் என தோன்றுகிறது.   ஏனெனில் இது உயர்சாதியினர் மட்டுமின்றி அனைத்து சாதியிலும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு  என்பதால் தங்களுக்கு மட்டும் பயன் இல்லை என உயர்சாதியினர் கருதி வருகின்றனர்.

அதே நேரத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் இது தங்களின் சமூகத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அதனால் இந்த ஒதுக்கீடு தாழ்ந்த சாதியினர் என கூறப்படுவோருக்கும் சாதி ரீதியாக திருப்தி அளிக்கவில்லை.

அநேகமாக அமித்ஷா குறிப்பிட்ட படி “முக்கியமானவரகளை மறந்து விட்டு முடிவை பாருங்க்ள்” என்பது அவர் எண்ணியதற்கு மாறாக முடியும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்”

என அந்த செய்தியில் காணப்படுகிறது.