டில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்ட இடம், ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.

இந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்றம், நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவற்றுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு விசாரணை இன்று முதல் மீண்டும்நடைபெற உள்ளது. இதற்காக தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசியல் சாசன அமர்வில்,. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யுயு. லலித் மற்றும் டி.ஆர்.சந்திரச்சாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.
[youtube-feed feed=1]