மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த 7 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற குளிகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சரமாறி கேள்விகளை எடுத்து வைத்தார். மோடியை விமர்சித்து அவர் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது ஒருபுறம் இருக்க, மறுப்புறம் மேகதாது அணை பிரச்சனையை எழுப்பி அதிமுக எம்பிக்கள் தொடர் அமளில் ஈடுபட்டனர்.
அவை நடவடிக்கையை நடைபெற விடாமல் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் 24 பேரை 5நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், நேற்றுப்போல் இன்றும் அதிமுக எம்பிக்கள் மீண்டும் அமளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவை நடவடிக்கை 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12மணிக்கு பிறகு அவை கூடியதும் அதிமுக உறுப்பினர்களுடனும், தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் சேர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதிமுக எம்பிக்கள் கேட்காததால் அருண் மொழித்தேவன், கோபாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன் உட்பட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்பிக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது.