நியுயார்க்:
தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து இந்தியா போராடாதது ஏன் என அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் புத்தாண்டின் முதல் கேபினட் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகளில் இந்தியாவின் கடந்த பத்தாண்டு செயல்பாடுகள் திருப்பதியளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்தியா மட்டுமல்ல ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் என்ன செய்து விட்டார்கள் என்று கேள்வி எழுப்பியவர், ஆப்கானிஸ்தானில் நுாலகம் தொடங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி செய்துள்ளார். இந்த நுாலகத்தை யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
தாலிபான்களுக்கு எதிராக 6 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்கா மட்டுமே போராடி வருகிறது. ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஏன் போராடவில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ் தானில் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த நாடுகள் முயற்ச்சி மேற்கொள்ளவில்லை. அமெரிக்காவின் பணியை அவர்கள் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஆப்கான் போருக்காக ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளாேம். மக்கள் எங்களை நேர்மை யாக நடத்த வேண்டும். இந்திய பிரதமருடன் நாங்கள் நட்புடன் இருக்கின்றோம். அவர் ஆப்கானிஸ்தானில் நுாலகம் கட்ட செய்த நிதியுதவி, ஆப்கானிஸ்தானில் நாங்கள் 5 மணி நேரத்துக்கு செலவிட்ட தொகையே.
இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டார்