டில்லி:
தலைநகர் டில்லியில் நிலவி வரும் வரலாறு காணாத கடும்பனி மூட்டம் காரணமாக, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டும், தாமதமாகியும் வருகிறது.
வட மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பனிப் பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை வெளிச்சம் குறைபாடு காரணமாக போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 முதல் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட திட்டமிடப் பட்டிருந்து அனைத்து விமானங்களும் விமான நிலயத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
அதுபோல 12 ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் டில்லி காற்று மாசு அதிகரித்துள்ளதால், சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உருவாகி உள்ளது.