பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா மற்றும் தேனா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வங்கிகள் இணைப்பு ஏப்ரல் முதல் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bank

இந்திய வங்கிகளுகு வாராக்கடன் மிக பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. வாராக்கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான மூன்று முக்கிய வங்கிகளை இணைக்க முடிவு எடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் ‘ப்ராம்ப்ட் கர்ரெக்டிவ் ஆக்சன்’ என்ற திட்டத்தின் மூலம் மூன்று வங்கிகள் இணைக்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசின் ஆலோசனைப்படி நல்ல நிலையில் இயங்கும் இரண்டு வங்கிகளுடன், தொய்வான நிலையில் இயங்கும் ஒரு வங்கியை தேர்வு செய்து இணைக்கப்பட உள்ளது.

அதன்படி விஜயா மற்றும் தேனா வங்கிகளுடன் பாங்க் ஆப் பரோடா வங்கி இணைக்கப்படுகிறது. இந்த வங்கிகள் இணைந்த பின் உருவாகும் புதிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய வங்கிகளைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாகத் செயல்பட உள்ளது.

இந்நிலையில் வங்கிகள் இணைப்பிற்கான நடவடிக்கைகு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.