j
துபாய்:
மீரக துறைமுகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி, இந்தியர் ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.
இந்தியாவைச் சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவர் அமீரகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அபுதாபி துறைமுகத்தில் ராணுவ கப்பல்களின் நடமாட்டத்தை அவர்  உளவறிந்து இந்திய தூதரகத்திடம் தகவல் அளித்ததாக, அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த அபுதாபியில் உள்ள உச்ச நீதிமன்றம் மனார் அப்பாஸூக்கு ஐந்து  ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு குறித்து முழு விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. “தண்டனை காலம் முடிந்ததும் அப்பாஸ் நாடு கடத்தப்படுவார்” என்று மட்டும், அந்நாட்டு  உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.