images
டைரக்டர் பாலாவின் படத்தைப்போலவே, படப்பிடிப்பும் டெரராகத்தான் இருக்கும். நடிப்பவர்களை உண்மையிலேயே வெளுத்து வாங்கிவிடுவார். இவரது முந்தைய படமான “பரதேசி” படப்பிடிப்பில், “எப்படி அடிக்க வேண்டும்” என்பதை நிஜமாகவே அடித்து சொல்லிக்கொடுத்ததோடு, அந்த ஸ்டில்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ( “எப்படி அடிவாங்க வேண்டும்” என்று சொல்லிக்கொடுக்கமாட்டார்!)
அவரது இயக்கத்தில் வெளிவர இருக்கும் “தாரை தப்பட்டை’ படத்திலும் இது போல தடாலடி வேலைகளைச் செய்தாரா என்ற கேள்வி எழுந்தது. படத்தின் நாயகி, வரலட்சுமியை படப்பிடிப்பின்போது பாலா அடித்துவிட்டார் என்றும் ஒரு பேச்சு கிளம்பியது.
இந்த நிலையில், தாரைத்தப்பட்டை பிரஸ்மீட் நடந்தது. வரலட்சுமி தனது படப்பிடிப்பு அனுபவங்களை கூறினார்.
அப்போது அவர், “ பாலா சார் இயக்கத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விசயம். இதுக்காக யாரும் எனக்கு ரெகமண்ட் பண்ணலை. ‘பரதேசி’ படத்தோட ரீ-ரிக்கார்டிங் நடக்கும்போது, ‘பிதாமகன்’ சங்கீதாதான் என்னை பாலா சார்கிட்ட அழைச்சுகிட்டு போயி அறிமுகப்படுத்தினாங்க. .
தாரைதப்பட்டை படத்துல எனக்கு கிராமத்துப் பெண் கேரக்டர் என்றவுடன் சந்தோஷமா ஒப்புக்கிட்டேன். ‘கிராமத்துப் பெண் கேரக்டருக்கு நான் செட் ஆக மாட்டேன்’ என்று சொல்லியே பல இயக்குநர்கள் என்னை தவிர்த்தாங்க. அந்த கருத்தை உடைக்க எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு இது.
இந்தப் படத்துல சசிகுமார் நடத்தும் கலைக் குழுவில் ‘சூறாவளி’ என்ற ஆட்டக்காரி கேரக்டர். இந்த படத்துல என்னோட டான்ஸ் ரொம்ப பேசப்படும். கராட்டம் தவிர, வேறு நடனங்களும் ஆடியிருக்கேன். ஷூட்டிங்கிற்கு முன்னால, இரண்டு மாதங்கள் ஹோம் வொர்க் செய்தோம். ஆனாலும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஆடினேன்” என்று பேசிக்கொண்டே போனவர், “பாலா அடி” மேட்டருக்கு வந்தார்.
“தன் படத்தில நடிக்கிறவங்களை பாலா அடிப்பார்னு சொல்வாங்க. ஆனஆ அப்படி எந்த ஒரு சம்பவமும் இந்தப் படத்தில நடக்கலை. படப்பிடிப்பு உண்மையிலேயே ரொம்ப ஜாலியாத்தான் இருந்துச்சு!” என்றார் புன்னகையோடு!
அப்பாடா.. ஒரு பெரிய சந்தேகம் தீந்துச்சு!