1
டால்ஸ்டாய் பிறந்தநாள்
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள் இன்று. லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்  1883ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவரது படைப்புகளில் போரும் அமைதியும், அனஅனா சுரேனியா ஆகியவை மிக புகழ் பெற்றவை. 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை இவரது படைப்புகள் விளக்கின.
220px-Kj_yesudas
 
ஜேசுதாஸ் பிறந்தநாள்
பிரபல திரைப்பட பாடகரும் சிறந்த கர்நாடக இசைப்பாடகரும் ஆன . ஜேசுதாஸ், 1940ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். தனது ஐம்பது ஆண்டு கால திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு ஆகிய இந்திய மொழிகளுடன், மலாய்,  ருஷ்ய, அராபிய, இலத்தீன், ஆங்கிலம் மொழிகளில் நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை புரிந்தவர். .மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகர் விருது பெற்றவர். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் அளித்தவர். சில மலையாளப் படங்களுக்கு இசை அமைத்ததும் உண்டு.
“கான கந்தர்வன்” என்று புகழப்படுகிறார்.
 
index
 
ஆர்.எஸ் மனோகர் நினைவு நாள்
ஆர்.எஸ். மனோகர், புகழ் மிக்க நாடக கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர்.  1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி , நாமக்கலில் சுப்ரமணியன்  மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமைசேர்க்கும் வகையில் பிரமாண்டமான சரித்திர மற்றும் புராண நாடகங்களை அளித்தவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 8000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். ராவணேஸ்வரன் என்ற இவரது நாடகத்தில் ராவணனை கதாநாயகனாக்கி அவனை நல்லவனாகக் காட்டி அதில் வெற்றியும் பெற்ற துணிச்சல் மிக்க சாதனையாளர். இவரது நாடகங்களின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு காரணமாக அவை “டிராமாஸ்கோப்” என்றழைக்கப்பட்டன.  இசைப்பேரறிஞர் விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். 2006ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.