91
வருமானவரி அறிமுகமான நாள்
சம்பாதிக்கும் அத்தனை பேரின் கவலைகளில் ஒன்று, வருமானவரி! இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் பிரிட்டன் பிரதமர் வில்லியம் பிட். 1799ல், நெப்போலியனுக்கு எதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த வருமான வரியை அறிமுகப்படுத்தினார் இவர்.  வரி டென்ஷன்ல திட்டுறவங்க, இவரைத் திட்டுங்க!
 
92
வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
உடனே, பிரதமர் மோடிக்கான் நாள் என்று நினைத்துவிடாதீர்கள். மகாத்மா காந்தி, தென்னாம்பிரிக்காவில் இருந்து வந்த 1915ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா வந்து சேர்ந்தார். அதன் நினைவாக கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இந்த நாள், “வெளிநாடு வாழ் இந்தியர் நாளாக” கொண்டாடப்படுகிறது.
அந்நியநாட்டில் பணி நிமித்தம் இருப்பவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் ஆகியோரின் உரிமைகள் குறித்து பேசும், சிந்திக்கும் நாள். ஆனால் சமீபத்தில், அரபு தேசத்தில், தனது முதலாளியால் கை வெட்டப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இது போல் எத்தனையோ… நாள் மட்டும் கொண்டாடாமல், செயல்பாட்டில் காட்டினால் அனைவரும் நிம்மதி அடைவர்.
 
a
 
ஜார்ஜ் கோட்டையில் முதல் சட்டமன்ற கூட்டம்
1921ம் ஆண்டு இதே நாளில்தான், சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.
இந்த புனித ஜார்ஜ் கோட்டைதான், இந்தியாவில் ஆங்கிலேயர் கட்டிய முதலாவது கோட்டை. (இது பெருமையா, சிறுமையா என்று தெரியவில்லை.) இந்தக் கோட்டை யில் தான். தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக நடந்தபோது கன்னாட் கோமகன் இதை தொடங்கி வைத்தார். (இதற்கும் “அம்மா”தான் காரணம் என்று கோட்டையில் யாரும் ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால் சரி!)
z
ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட நாள்
ஐ.நா. சபை என்கிற வார்த்தை தினசரி, தொ.கா. களில் தினமும் பல முறை அடிபடும் பெயர். இது எங்கே இருக்கிறது, இந்த அலுவலகம் செயல்படும் இடத்தை அளித்தவர் யார் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது 1951ம் ஆண்டு, இதே நாளில்தான். இன்று அது பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்தானே?
1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டடம்  ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம்,  அமெரிக்காவில் மான்ஹட்டனின் நியூயார்க் நகரில்   ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரத்தில் இருந்தாலும்,  அமெரிக்காவுக்கு  சொந்தமானதல்ல!  இந்த இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதி !