jayalalitha
தமிழ் நாடு:
ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  கடந்த நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரகோஷ், அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய நீதிபதியாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டார்.  நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு  முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ‘‘இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 2ம் தேதி முதல் நடக்கும். தினமும் விசாரிப்பது குறித்து இதர வழக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அதற்கு முன் மனுதாரர்கள் பதில் அளிக்கலாம்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.