ண்டிகர்

னைவியையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள கணவர்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்க உள்ளதாக அரியானா அரசு தெரிவித்துள்ளது.

கருவுற்ற பெண்களின் பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களில் இருந்து 9 மாதங்களாக மாற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டன.    அதே நேரத்தில் மனைவி மற்றும் புதிதாய் பிறந்த குழந்தையை பராமரிக்க கணவர்களுக்கும் பேறுகால விடுமுறை தேவை என அரியான அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இன்று அரியானா முதல்வர் மனோகர்லால் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நிகழ்த்தினார்.   அந்தக் கூட்டத்தில் கணவர்களுக்கு பேறுகால விடுமுறை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.    இறுதியில் அனைத்து அரசுத் துறையில் உள்ள ஆண் ஊழியர்களுக்கும் அவர்கள் மனைவியின் பேறு காலத்தின் போது 15 நாள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இதே கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.