
சென்னை
நாளை காலை 9 மணிக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 1,52,940 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 8 முதல் 14 வரை நடைபெற உள்ளது.
பொறியியல் கல்வி பயில விண்ணப்பித்துள்ள 1,52,940 மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை (ஜூன் 5) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது.
Patrikai.com official YouTube Channel