
டில்லி:
நீட் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு தள்ளுபடியானது.
அதேவேளையில் மதுரை உயர்நீதி மன்றத்திலும், நீட் ரிசல்ட் வெளியிடக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட முன்கூட்டியே நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது.
கீழே உள்ள இணையதள முகவரியை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்
http://cbseresults.nic.in/neet18qry/neetJ18.htm
இன்று நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, மருத்துவப்படிப்பான, எம்பிபிஎஸ் படிப்பதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
12ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என்றும், 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.