“பாம்” (வெடிகுண்டு) புரளியால் விமானம் அவசரமாக தரையிறங்கியது உண்டு. ஆனால் ஒரு பயணியின் “பாம்” (வாயு பிரிவது) காரணமாக தரையிறஹ்கிய அதிசய சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது.
வடமேற்கு ஆப்ரிக்காவில் இருந்து ஸ்பானிஷ் அருகே உள்ள தீவுக்கு டச் டிரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு பயணியிடம் இருந்த வந்த துர்நாற்றம் (வாயு பிரிவது) வந்தது. அது சாதாரணமாக இல்லாமல் கடும் துர்நாற்றத்துடன் இருக்கவே.. சக பயணிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இப்படி பல பயணிகள் பாதிக்கப்பட்டதால் பைலட் விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து இலக்கை அடைவதற்கு முன்பே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு துர்நாற்றம் வந்த நபர் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறை இல்லை. பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்ற விமானத்திலும் இதே பிரச்சினை ஏற்பட்டு விமானம் தாமதமானதாம்.