துபாய்:
சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு எதிரான பாரம்பரிய அடக்குமுறைகளை நீக்கும் வகையில் பல சீர்திருத்த முடிவுகளை அறிவித்துள்ளார். இதற்கு பெண்கள் மத்தியிலும், உலக நாடுகள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
மசூதிகளில் சினிமா தியேட்டர், கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் இந்த மாற்றங்களுக்கு எதிராக இளவரசர் சல்மானுக்கு அரேபிய தீபகர்பத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த அமைப்பு ஏற்கனவே ஏமனில் உள்நாட்டு போரை நடத்தி வருகிறது. இதை எதிர்த்து சவுதி அரேபியா தலைமையிலான ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இது வரை 10 ஆயிரம் மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். பல ஆயிரம் மக்கள் காயமடைந்துள்ளனர். இதை உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐநா தெரிவித்துள்ளது.