கம்பாலா:

சமூக வலை தளங்களுக்கு வரி விதிப்பு என்ற அறிவிப்பை பார்த்து அவசரப்பட்டு யாரும் நமது பிரதமர் மோடியை திட்டிவிட வேண்டாம். இது இந்தியாவில் அல்ல. உகாண்டாவில்.

கிசு கிசு செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சமூக வலை தள பயன்பாட்டிற்கு வரி விதிக்க உகாண்டா அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர், டுவிட்டர் போன்றவை வரி விதிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சமூக வலை தள பயன்பாட்டிற்கு தினமும் அந்நாட்டு பணத்தில் 200 சில்லிங் செலுத்த வேண்டும். கிசு கிசுக்களை அதிகம் பரவுவதால் அதை கட்டப்படுத்த அந்நாட்டு அதிபர் யோவேன் முசேவினி இந்த முடிவு எடுக்கப்படும் என்று கடந்த மார்ச்சில் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் வசூலாகும் நிதியை கொண்டு நாட்டின் கடனை அடைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு மொபைல் மூலம் பண பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி வதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உகாண்டாவில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமூக வலை தளம் முக்கிய காரணியாக விளங்குகிறது. 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது பொய் செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக வலை தளங்கள் முடக்கிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.