திருப்பதி

திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் சென்ற மாதம் ரூ. 86 கோடியை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டு முழுவதும் மக்கள் வெள்ளம் அலைமோதும்.    அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக மே மாதத்தில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்க்கமான பக்தர்கள் வருவது வழக்கம்.    இந்த மாதங்களில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையும் அதிகரிப்பது வழக்கம்.

 

திருப்பதி ஆலயத்தின் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம், “ சென்ற மே மாதம் மட்டும் திருப்பதி கோவிலுக்கு 24,55,000 பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர்.  இவர்கள் உண்டியலில் ரூ.86,45,00,000 வரை காணிக்கை அளித்துள்ளனர்.   வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கான டிக்கட்டுகள் இன்று முதல் www.ttdsevaonline.com  மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.