தனது மகள் பெருமைக்கொள்ளும்படி தான் நடந்து கொள்ள முயற்சிப்பதாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
பாரிசில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில் 36வயதான அமெரிக்க வீரர் ஆஷ்லி பார்டியை 3-6, 6-3, 6-4 சென்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற செரீனா, தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த போது 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதே ஆண்டு பாரிசில் தங்கியிருந்த செரீனாவிற்கு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அலெக்ஸ் ஒலிம்பியா ஒஹானியன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் செரீனா.
தற்போது பாரிசில் நடந்து வரும் ஓப்பன் டென்னிசின் மீண்டும் பங்கேற்ற செரீனா ’ இது என்னால் நம்ப முடியவில்லை. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், முதல் செட் கணக்கில் தான் தோற்றதால் கடினமாக முயற்சி செய்ய வேண்டியுள்ளது’ என கூறியுள்ளார்.
மேலும், ’ வீனஸ் இரட்டையர் போட்டியில் நாளை மீண்டும் விளையாட உள்ளேன், விளையாட்டில் ஒற்றையர், இரட்டையருடன் விளையாடுகிறேன் என்பதை நான் மனதில் கொள்ள மாட்டேன், மாறாக எனது இதயத்தை சமாளிக்க நான் போராடுவேன்.
எனது மகள் பெருமைக்கொள்ளும் படி அனைத்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். மீண்டும் முதலாம் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு திரும்பியுள்ள நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். .
ஒரு நாள் தனது மகளிடம் என்னால் முயன்றவரை சிறப்பாக நடந்துக் கொள்ள முயற்சித்தாக கூறுவேன். ரத்த குழாய் அடைப்புகள் பற்றி மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 2018ம் ஆண்டு தனக்கு வித்யாசமாக இருந்தது” என்றும் கூறியுள்ளார்.
செரீனா வரும் 16ம் தேதி ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ் உடன் மோத உள்ளார். இதில் வெற்றிப்பெற்றால் கால்இறுதி போட்டியில் மரியா ஷரபோவாவுடன் மோத உள்ளார்.