டில்லி:

உக்ரைனில் இருந்து ஏ.என் 32 ரக போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய லஞ்சம் கொடுத்த புகார் குறித்து அந்நாட்டு ரசு விசாரனை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தொடர்ப்பு இருப்பதாக சந்தேகத்தையும் எழுந்துள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உக்ரைன் அரசிடம் இருந்து லட்சக் கணக்கான அமெரிக்க டாலரை துபாயில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டின் பாதுகாவலன் என சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி ஊழல் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.