பெங்களூரு:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னர் ஜஸ்டரை கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ‘‘பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைக்க வேண்டும். கர்நாடக அரசு அமெரிக்காவுடன் நல்ல உறவை பேணி வருகிறது. தூதரகம் அமைப்பதற்கு தேவையான இடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்கப்படும்.
அமெரிக்காவில் ஏராளமான கன்னடர்கள் வேலை செய்கின்றனர். கர்நாடகாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் 370க்கு மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது’’ என்று குமாரசாமி தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel