சென்னை:
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நியமன ஆணையை ராஜேந்திரனிடம் கவர்னர் வழங்கினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக 3 பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து அவர்களில் ஒருவரான ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கவர்னரால் பன்வாரிலால் புரோகித்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர். 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயக்குனர் மற்றும் துறை தலைவராக பணிபுரிந்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.