தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வர்களை  நள்ளிரவில் போலீசார்  வீடு புகுந்து கைது செய்தனர். நேற்று நள்ளிரவு மட்டும் 15 பேரை கைது செய்துள்ளனர்.

இது தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி வேட்டையில், 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் இன்னும் முழுமையான அமைதி திரும்பாத நிலையில், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்த 15 பேரை போலீஸார் நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்துள்ளனர்.

இவர்கள் 15 பேரும் ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள  அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.