சென்னை:
தூத்துக்குடியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை எதிர்த்து, மனித உரிமைகள் நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.