சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாமக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 102 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை பாமக சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படவிருக்கிறது.
இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான பினாமி அரசு பதவி விலக வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (26.05.2018) சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.