(பைல் படம்)

டில்லி:

திய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக  அன்றைய தினங்களில் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கி ஊழியர்கள் சம்மேளம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி கடந்த 5ம் தேதி மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக  முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு  வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கலந்தாலோசித்து, இந்த மாதம் இறுதியில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி  இந்த மாத இறுதியில் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதன் காரணமாக அடுத்த வாரம்  புதன் மற்றும் வியாழன்கிழமைகளில் வங்கிப் பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில்  நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது