சென்னை

மிழகத்தில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததை ஒட்டி சென்னை உட்பட பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.   காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலர் மரணம் அடைந்தனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சியினர் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு வணிகர்கள் சங்கமும், தொழிற் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.    மாநிலம் எங்கும் காவல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   குறிப்பாக சென்னையில் தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம், மெரினா கடற்கரை, ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தீவிர பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]