சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் சிறப்பான நடைபெற்று வருகிறது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தபப்ட்டு வருகின்றன. ஜெயலலிதா கொடுத்ததை விட சிறப்பான நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறார். மக்களோடு மக்களாகப் பழகும் முதல்வரின் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது வேறு யாருக்கும் வராது’’ என்றார்.