மாஸ்கோ:
ரஷ்ய அதிபராக விளாமிர் புடின் இன்று பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு புதியவரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் டிமிட்ரி மெட்வடேவ்-ஐ மீண்டும் பிரதமராக புடின் நியமித்துள்ளார்.
இந்த நியமனத்துக்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஒப்புதல் பெற வேண்டும். அங்கு கண்டிப்பாக பிரதமர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என்ற கருத்து எழுந்துள்ளது.