ராஞ்சி:
ஜார்கண்ட்டில் கோமியா மற்றும் சில்லி தொகுதி எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யோகேந்திரா மாஹ்ட்டோ, அமித் மாஹ்ட்டோ ஆகியோருக்கு வெவ்வேறு வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்எல்ஏ பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர்
இதையடுத்து இரு தொகுதிகளுக்கும் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை 11-ம் தேதி நடைபெறும்.
14-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை 31-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி கியாங்ட்டே தெரிவித்துள்ளார்.