
கொல்கத்தா
ஐபிஎல் 2018 இன் 33 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் 2018 போட்டிகளின் 33 ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்காக 178 ரன்கள் இருந்தன. அபாரமாக விளையாடிய கொல்கத்தா அணி 17.4 ஆவது ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. இதை ஒட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தர வரிசைப்படியலில் கொல்கத்தா 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் சென்னை 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கும் வந்துள்ளது.
[youtube-feed feed=1]