திருச்சி:

ச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கலையுங்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறி உள்ளார்.

காவிரி வழக்கில் ஏற்கனவே தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், உச்சநீதி மன்ற உத்தரவையோ, தமிழகத்தின் கோரிக்கையையோ கர்நாடகம் செவிமடுப்பதில்லை.

இந்நிலையில் இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற காவிரி தொடர்பான வழக்கில், கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும், கர்நாடக முதல்வர் தண்ணீர் தர முடியாது என்று மீண்டும் கூறி உள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு,  தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும்,  உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார்.