சேலம்:
ஒவ்வொரு திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்ட முதியர் ஒருவர், சேலம் கலெக்டர் ரோகிணி தலையில் செருப்பை வைக்க முயன்றார்.
இதனால் கலெக்டர் ரோகிணி அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார். ஆனால், அந்த முதியவர், கலெக்டர் அருகே இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலையில் செருப்பை வைத்தார்.
இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அவரை மடக்கி பிடித்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவருக்கு தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின் அந்த நபர், தான் ஒரு மருத்துவர் என்று கூறியதாக கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது