சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மெரினாவில் போரட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது, சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel