ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி
சென்னை:
சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள்  செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த
பேட்டி:
பொங்கல் பண்டிகைக்கு பிறகு மத்திய தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு தமிழகம் வருகிறது. தமிழகத்தில் உள்ள  ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொள்ளும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த 43 ஆயிரம் பேர் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு  விண்ணப்ம் அளித்துள்ளனர். 18 ஆயிரம் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும்.
அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து புதிய கண்காணிப்பு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
சமூக வளை தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை மூலம் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிர பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டது. சமூக வளை தளங்களில் பதிவு செய்யப்படும் விமர்சனங்கள் மீது எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம அறிவுறுத்தியுள்ளது. இதன் பிறகு சமூக வளை தளங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் குறிவைத்து, அதற்கென தனி பிரிவையே உருவாக்கி விமர்சனங்களுக்கு பதிலடியும், ஆதரவு பிரச்சாரங்களையும் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமூக வளைதளங்களை பாஜ முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெற்றது. இந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் சமூக வளைதளங்களின் பிரச்சாரம் முக்கியத்துவம் பிடிக்கும். அதற்கு ஏற்றார் போல் இப்பிரச்சாரத்தை கண்காணிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பது குறிப்படத்தக்கது.